அதிமுக மாநாடு வரும் 20ம் தேதி அன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக, அதிமுகவினர் இந்நிலையில், காரைக்குடி பகுதியை சேர்ந்த கணேச தேவர் என்பவர் அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆகஸ்டு 19ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரை கிளை நீதிபதி நாகார்ஜூனா முன் வந்தது. அப்போது, அதிமுக தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று வாதாடப்பட்டது. மேலும், 19ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ” 20ம் தேதிதான் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை” என்று கேள்வி எழுப்பினார். மேலும், மனுதாரர் காவல் துறையை அணுகி உரிய அனுமதி பெற்று 19ம் தேதி போராட்டம் நடத்தலாம் என நீதிபதி தெரிவித்தார்.

