பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும், கனியவள உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல், ஆகியனவும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வைத்தியசாலைகள், மருந்தகங்கள், நோயாளர்களின் பராமரிப்பு மற்றும், சிகிச்சை அளித்தல் என்பவற்றையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

