அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நெருக்கடி நிலையில் ராஜபக்சர்கள்!

249 0

ராஜபக்ச சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நடைபெறும் தேர்தலில்போட்டியிடத் திட்டமிட்டுள்ள இருவரும், அமெரிக்க குடியுரிமையை கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

19 வது திருத்த சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரான அரசியலமைப்பிற்கமைய, இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் செயற்படும் தகுதியை இழந்து விடுவார்.

அரசியலமைப்பிற்கமைய இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவர் நாடாளுமன்றத்தில் பிரதிநிதியாக நியமிக்கப்படுவதற்கு இடமில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பதவி நிலையில் உறுதியாகியுள்ளது.

கீதா குமாரசிங்கவின் பதவி நிலையில் நடைபெறும் வழக்கு விசாரணையின் போது சட்டமா அதிபர், புதிய சட்டம் குறித்து தெளிபடுத்தியுள்ளார். இந்நிலையில் வழக்கிற்கான தீர்ப்பு வெளியிடப்படவுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பசில் ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டுள்ளதுடன், கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இரட்டை குடியுரிமையுடன் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.