நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீட்க பொருளாதார அபிவிருத்தி அவசியம்! சஜித்

75 0

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க பொருளாதார அபிவிருத்தி அவசியம் எனவும், அதற்காக கைத்தொழில்களை மேம்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று வர்த்தகர்களுடன் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

சிறு, நடுத்தர மற்றும் பாரியளவான கைத்தொழிலை மேம்படுத்த வேண்டும் எனவும், ஊழல் மற்றும் கையூட்டலை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.