யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.சிசிதரனின் பெயரில் போலி முகப்புத்தகக் கணக்கு

411 0

13731548_10205087099377692_5267210514748924624_nநீதிமன்றத்தில் முன்னிலையாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.சிசிதரனின் பெயரில் போலி முகப்புத்தகக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.சிங்கள மொழியினாலேயே இவ் முகப்புத்தம் இன்று ஆரம்பிக்கப்பட்டு, தமிழ் மாணவர்கள் மத்தியில் உலாவ விடப்பட்டுள்ளது.இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் த.சிசிதரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனக்கும் குறித்த முகப்புத்தக கணக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்விடயம் தொடர்பாக முகப்புத்தக நிறுவனத்திற்கு உரிய முறைப்படி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இச் செயற்பாடானது பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் குழப்பமான நிலையினை தோற்றுவிப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.