சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று, அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அங்கீகரிக்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வுக்காக குறித்த குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் மற்றும் 27ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முதலாவது மதிப்பாய்வின் போது ஜூன் மாதம் இறுதி வரையிலான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் செயல்திறன் குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து குறித்த அதிகாரிகள் குழுவினாலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையினாலும் அங்கீகரிக்கப்பட்டால், சுமார் 338 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு வழங்க அனுமதிக்கப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை கடந்த மார்ச் மாதம் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு அங்கீகாரமளித்தது.
இதன் முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு முன்னதாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
சுவிட்சர்லாந்தில் நடக்கவிருக்கும் எதிர்வரும் நிகழ்வுகள்-2026
February 20, 2026 -
பிரான்சில் வன்னிமயில் 2026.
February 18, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

