கம்பஹா திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொரகஸ்முல்ல பிரதேசத்தில் இரு கஜமுத்துக்களை 10 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹோமாகம, கித்துள்கல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38, 46 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து திவுலுப்பிட்டி பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமாக பயணித்த முச்சக்கர வண்டியை வழிமறித்து சோதனை செய்த பொலிஸார் கஜமுத்துக்களை கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

