நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்த கோரிக்கை

75 0

தற்போது வறட்சியான காலநிலை நிலவுவதால், அத்தியாவசிய மற்றும் சுகாதார தேவைகளுக்கு மாத்திரமே தண்ணீரை பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நீர்மட்டம் வேகமாக குறைவடைந்து வருவதுடன் மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நுகர்வோரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மலையகத்தில் உள்ள நீர் பாவனையாளர்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் சபையின் விசேட அறிவிப்பில் சுட்டிக்காட்டிக்காட்டப்பட்டள்ளது.

இதனால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு வருந்துவதாகவும் அதே நேரத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.

அத்துடன் அநாவசியமாக நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் சபை கோரியுள்ளது.