மேலும் ஒரு மோட்டார் வாகனம் கொள்ளை

156 0

நபர் ஒருவரை தாக்கி மோட்டார் வாகனத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கிரிந்திவெல பொலிஸாரால் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (13) மோட்டார் வாகனத்தில் வந்த மூவர், கிரிந்திவெல, போகஹாவத்தை சந்திக்கு அருகில், வீதியில் சென்று கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் வாகனத்தை வீதியின் குறுக்கே மறைத்து சாரதியை தாக்கி மோட்டார் வாகனத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

பின்னர் கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் கொள்ளையிடப்பட்ட மோட்டார் வாகனத்துடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரந்தாவன மற்றும் விலிபுலஹேனேகம பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 29 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று(14) பூகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.