பெந்தோட்டை இசை நிகழ்ச்சியில் மோதல் : தடுக்கச் சென்ற பொலிஸார் தாக்கப்பட்டதில் நால்வர் காயம்!

155 0

பெந்தோட்டை பொலிஸ் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்ச்சியை காண வந்த இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை  தடுக்க முற்பட்டபோதே  பொலிஸாரை   தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பெந்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.  பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.