பம்பலப்பிட்டி விபத்தில் 7 பேர் காயம்!

167 0

பம்பலப்பிட்டி டூப்ளிகேசன் வீதி, புல்லர்ஸ் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ்ஸும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது.