யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் ஆண்டு நிறைவையொட்டி மென்பந்தாட்ட போட்டிக்கு ஏற்பாடு!

167 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞான அலகின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவையொட்டி யாழ் மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கிடையிலான விலகல் முறையிலான மென்பந்தாட்ட போட்டி நடாத்தப்படவுள்ளது.

யாழ் மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், மற்றும் அரச வங்கி அணிகள் தங்கள் பதிவினை 2023.08.20 ற்கு முன் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களால் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தினை விளையாட்டு விஞ்ஞான அலகு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பிறவுண் வீதி, கொக்குவில் எனும் முகவரியில் சேர்ப்பதற்குமாறு கோரப்பட்டுள்ளது.