அனுராதபுரம் – மிஹிந்தலை இடையில் இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டம்

154 0

அனுராதபுரத்திற்கும் மிஹிந்தலைக்கும் இடையில் இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொருட்கள் போக்குவரத்திற்கான  வாய்ப்பினை வழங்கும் வகையில் இந்த புதிய பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபிவிருத்தி செய்யப்பட்ட கெக்கிராவ – தலாவ வீதியை பொது உடமையாக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.