ஈஸ்டர் தாக்குதல்-24 சந்தேக நபர்களுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள்

185 0

நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிராக ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டின் கீழ் 23,270 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று நிறைவடைந்தது.

மூன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.

நௌபர் மவ்லவி, சஜித் மவ்லவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, மொஹமட் சனஸ்தீன் மற்றும் மொஹமட் ரிஸ்வான் உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கொலை சதி, உதவி செய்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்தல் மற்றும் கொலை முயற்சி ஆகியவை அடங்கும்.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஓக்டோபர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட அதேநேரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பி. அம்பாவிலவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.