அரசாங்கம் மீது ஜே.வி.பி குற்றச்சாட்டு

195 0
மீண்டும் கடன்பெறுவதற்கான ஒரு முயற்சியாக ஐந்து அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளதாக ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது.
வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜே.வி.பி. இன் மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐந்து அரச நிறுவனங்களை செயல்திறன் மிக்கதாக மாற்றுவதற்காக நிதி அமைச்சின் கீழ் அவற்றை கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரச நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்த முடியும் என குறிப்பிடுகின்றனர்.
அபிவிருத்தி என்ற போர்வையில், இலங்கையின் சொத்துக்களை விற்பனை செய்யும் முயற்சியே மேற்கொள்ளப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் 15 ஆயிரம் ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பு சீனாவிற்கு வழங்கப்படுவது என்பன இதற்கு உதாரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வரிகளை அதிகரித்து மக்களின் வாழ்க்கை சுமையை அதிகரிக்கின்றனர்.
இந்த நிலையில், இந்த வருடம் நிறைவடைகின்ற போது, ஒரு குடும்பத்திடம் 3 ஆயிரத்து 866 ரூபா வரியாக அறவிடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன என வசந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.