பிரான்ஸில் விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 9 பேர் பலி

147 0
பிரான்ஸில் விடுமுறை விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீயினால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என அஞ்சப்படுகிறது.

ஜேர்மன் எல்லையிலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வின்ட்ஸென்ஹெய்ம் நகரில்

இன்று (9)  காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த விடுதிப் பகுதியே தீப்பற்றியுள்ளது.

9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தீ தற்போது அணைக்கப்பட்டு விட்டது.  இத்தீ பரவியமைக்கான காரணம் தெரியவில்லை.