பைடனை கொலை செய்யப்போவதாக மிரட்டியவர் எவ்பிஐ அதிகாரிகளால் சுட்டுக்கொலை

151 0
image
அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக இணையவழி அச்சுறுத்தலை விடுத்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

யுட்டாவிற்கு  ஜோபைடன் விஜயம் மேற்கொள்வதற்கு சில மணிநேரங்களிற்கு முன்னர் அந்த நபரை கைதுசெய்வதற்காக வீட்டிற்கு எவ்பிஐ அதிகாரிகள் சென்றவேளை இடம்பெற்ற சம்பவத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கிரெய்க் ரொபேர்ட்சன் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார், இணையவழி மூலம் பைடனிற்கும்  முன்னாள் ஜனாதிபதி டிரம்பிற்கு எதிரான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதிகாரிக்கும்  எதிராக ரொபேட்சன் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

முகநூலில் இந்த  எச்சரிக்கையை விடுத்திருந்த ரொபேட்சன் துப்பாக்கிகளின் படங்களையும் பதிவுசெய்திருந்தார்.அமெரிக்க நியுயோர்க் சட்டமா அதிபர்களுக்கு எதிராகவும்  ரொபேட்சன் மரணஅச்சுறுத்தலை விடுத்தார் என  தகவல்கள் வெளியாகியிருந்தன.

பைடன்யுட்டாவிற்கு வருகின்றார் என அறிந்துள்ளேன் எனதுப்பாக்கிகளை தூசி தட்டி தயாராகின்றேன் என அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.