வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையை எவருக்கும் கையளிப்பதாக இல்லை

83 0
வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா குடிமக்கள் பேரவையானது வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கக் கோரியும், அவ்வாறான திட்டம் இருக்கும் பட்சத்தில் அதனை கைவிடுமாறும் வட மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தியிருந்தது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, உதவி காணி ஆணையாளர் க. சிவப்பிரியா, வவுனியா அரச பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளதாக குடிமக்கள் பேரவைக்கு அறிவித்துள்ளார்.