யாழில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

65 0

யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான விபரங்களைச்  சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் சேகரிக்கப்படும் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்களுக்கான பொறிமுறை மற்றும் கட்டுப்பாடுகளை வகுக்க தீர்மானிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.