சிவாஜிலிங்கத்தை விலகுமாறு தமிழ் தேசியக்கட்சிக்குள் குழப்பம்!

40 0

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கோரப்பட்டிருந்தது.

இருப்பினும், பதவி விலகாததை அடுத்து, கட்சியை விட்டு நீக்கப்படுவதாக நேற்று முன்தினம் (06.08.2023) நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதன்போது இந்தியாவில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான கோரிக்கையை வலியுறுத்தி மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.