கனே­டிய பிர­த­மரின் மண­மு­றிவு : அர­சி­யல்­வா­தி­களின் தனிப்­பட்ட வாழ்க்கை ஆட்சி நிர்­வா­கத்தின் பொருட்­டானதா?

209 0

கனே­டிய பிர­த­மரும் அவ­ரது மனை­வியும் தாம் பிரி­வ­தாக கடந்த வாரம் அறி­வித்­தார்கள். இது பற்­றிய செய்­திக்கு ஊட­கங்கள் அதிக முக்­கி­யத்­துவம் வழங்­கி­யி­ருந்­தன. கன­டா­விலும் வெளி­நா­டு­க­ளிலும் இரு வகை­யான எதிர்­வி­னைகள்.

வெளி­நா­டு­களில், ‘ஐயோ அற்­பு­த­மான தம்­ப­தியாச்சே, ஏன் இப்­படி? என்ன நடந்­தது?’ என்ற தொனியை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

கனே­டிய மக்கள், ‘இது இரு­வ­ரதும் தனிப்­பட்ட விஷயம். நாம் மூக்கை நுழைப்­பானேன்?’ என்­ற­வாறு பேசிக்கொண்­டார்கள்.

கனே­டிய பிர­தமர் ஜஸ்டின் ட்ருடோ 2005இல் சோபி­யாவை மணந்தார். தமது 18 வரு­ட­கால திரு­மண வாழ்க்­கையில் இரு­வ­ருக்கும் மூன்று பிள்­ளைகள். காதல் திரு­ம­ணந்தான். தனது தம்­பியின் சினே­கி­தி­யாக அறி­மு­க­மான பெண், பின்­னாட்­களில் பொது நிகழ்­வொன்றில் ட்ரூடோவின் வாழ்க்­கையில் குறுக்­கிட்டார்.

தமது காதலை 31 வயதில் வெளிப்­ப­டுத்­திய தரு­ணத்தில், ‘இத்­தனை வரு­டங்கள் உனக்­கா­கவே காத்­தி­ருந்தேன்’ என ட்ரூடோ சொன்­ன­தாக சோபியா கூறுவார்.

கடந்த வாரம் பிரிதல் பற்றி அறி­வித்­த­போது, தாம் மன­மொப்­பியே பிரி­கிறோம் என்று இருவரும் கூறி­னார்கள்.

15 வயதில் மகன், 14 வயதில் மகள், ஒன்­பது வயதில் கடைக்­குட்டி மகன் ஆகிய மூவ­ரி­னதும் நல­னுக்­காக தனிப்­பட்ட வாழ்க்­கையை மதிக்­கு­மாறு பிரிந்து செல்லும் தம்­பதியினர் கேட்­டனர்.

உலக நாடு­களின் மக்கள் ட்ரூடோ தம்­ப­தியின் பிரிவு பற்­றிய செய்­திக்கு சற்று உணர்ச்சிவசப்பட்­டார்கள் என்றால், அதற்கு காரணம் இருந்­தது. இந்த மக்­களின் கண்­க­ளுக்கு ட்ரூடோ ஈர்ப்பு மிக்­க­வ­ராக திகழ்ந்தார். அந்த மக்கள் அவரை ஆளுமை மிக்க உலகத் தலை­வ­ராக பார்த்­தார்கள்.

இன்னும் சொல்லப்போனால், கனே­டிய பிர­த­ம­ருக்கு ஒரு திரை நட்­சத்­தி­ரத்தின் புகழும் அந்தஸ்தும் இருந்­தது. அவர் குடும்­பத்தின் மீது காட்­டிய பாசத்தை மக்கள் ரசித்­தனர்.

இந்த ஆர்வம் கார­ண­மாக ட்ரூடோ, சோபியா ஆகி­யோ­ருக்கு இடையில் மண­மு­றிவு ஏற்­ப­டு­வ­தற்­கு­ரிய காரணம் என்­ன­வென்று அறி­வதில் ஆர்வம் காட்­டி­னார்க்ள.

கனே­டிய மக்­களைப் பொறுத்­த­வ­ரையில், பிர­த­மரின் தனிப்­பட்ட வாழ்க்கை பற்றி பெரி­தாக அக்­க­றைப்­பட வேண்­டிய தேவை இருக்­க­வில்லை. அவர்­களின் கலா­சாரம் அப்­ப­டிப்­பட்­டது. பிரிவு, மண­மு­றிவு, சட்­டப்­ப­டி­யான விவாக­ரத்து என்­ப­தெல்லாம் அல்­லோ­ல­கல்­லோ­லப்­பட வேண்­டிய விஷ­ய­மல்ல. பல­ரது வாழ்க்­கையில் நடப்­பது தானே என்ற மனப்­பாங்கு.

ஒரு பிர­த­ம­ராக ட்ரூடோ ஆற்றும் காரி­யங்­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தா­விடின், இந்தப் பிரிவு பொருட்­ப­டுத்த தேவையில்லாத ஒன்­றென்­பது கன­டாவின் பொதுக் கண்­ணோட்டம்.

இந்தக் கண்­ணோட்டம் நாட்­டுக்கு நாடு மாறு­ப­டலாம். ஒரு நாட்டில் சரி­யா­ன­தா­கவும், இன்­னொன்றில் தவ­றா­ன­தா­கவும் பார்க்­கப்­ப­டலாம்.

ஒரு நாட்டின் அர­சியல், சமூக, கலா­சார கார­ணிகள் அடிப்­ப­டையில், அர­சி­யல்­வா­தியின் தனிப்­பட்ட வாழ்க்கை பற்­றிய கண்­ணோட்டம் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. சில நாடு­களில் தமது அர­சியல் தலைவர் மிகவும் ஒழுக்­க­மாக இருக்க வேண்டும் என்­பதில் அவரை தெரிவு செய்த மக்கள் இறுக்கம் காட்­டு­வார்கள்.

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி பில் கிளின்டன், வெள்ளை மாளிகை முன்னாள் ஊழியர் மொனிக்கா லெவின்ஸ்கி காதல் விவ­கா­ரத்தை ஞாப­கப்­ப­டுத்­தலாம். இது அமெ­ரிக்க அர­சி­யலில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­திய விவ­கா­ர­மாகும்.

இது மக்கள் மத்­தியில் பில் கிளின்­ட­னுக்கு இருந்த அபி­மா­னத்தில் கறை­ப­டியச் செய்­த­துடன், அவரை அர­சியல் குற்றப் பிரே­ரணை வரை இழுத்துச் சென்­றது. பிரான்ஸ் போன்ற நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில், இந்தப் பிரச்­சினை வேறு வித­மா­கவே அணு­கப்­படும்.

தமது மனை­வியை ஏமாற்றி நடி­கை­யுடன் காதல் தொடர்பு பேணிய செய்தி அம்­ப­ல­மா­ன­போது ஜனா­தி­பதி பிரான்­சுவா ஹொல்­லந்­தேயை மக்கள் வெறுத்­தார்கள்.

முன்­னைய ஜனா­தி­பதி நிக்­கலஸ் சார்­கோஸி விவ­கா­ரத்தில், பிரெஞ்சு மக்கள் அந்­த­ள­வி­ற்கு கடு­மை­யாக இருக்­க­வில்லை. அவர் பாடகி கார்லா ப்ருணி­யுடன் தொடர்பில் இருந்த தகவல் அம்­ப­ல­மா­ன­போது, அவர் மீது மக்­க­ளுக்கு இருந்த ஆத­ரவு கணி­ச­மாக வீழ்ந்­ததை கருத்­துக்­க­ணிப்­புகள் காட்­டின.

எனினும், ப்ரூணியை சார்­கோஸி திரு­மணம் செய்து, இரு­வ­ருக்கும் பெண் குழந்தை பிறந்­த­போது, அவர் மீதான ஆத­ரவு பழைய நிலைக்குத் திரும்­பி­யது.

ஒரு தலை­வரை மக்கள் எந்­த­ள­விற்கு அங்­கீ­க­ரிக்­கி­றார்கள் என்­பதைத் தீர்­மா­னிப்­பதில் அவ­ரது தனிப்­பட்ட வாழ்க்கை முக்­கி­ய­மா­ன­தொரு விட­ய­மாக இருக்­கி­றது. ஒரு தலை­வரின் தனிப்­பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்­சி­னைகள் மீது மக்கள் அக்­கறை காட்ட வேண்­டுமா? அது அவ­சி­ய­மா­னது தானா?

தனிப்­பட்ட வாழ்க்கை எப்­ப­டி­யா­வது இருந்து போகட்டும். அது அவ­ரது ஆட்சி நிர்­வா­கத்தைப் பாதிக்­கா­விட்டால்இ அதைப் பற்றி கவ­லைப்­ப­டு­வதில் அர்த்தம் உண்டா?

சம­கால உலகில் இவை மிகவும் முக்­கி­ய­மான கேள்­விகள். துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக இதற்கு ஆமென்றோஇ இல்­லை­யென்றோ தீர்க்­க­மாக பதில் அளிக்க முடி­யாது. அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில்இ இராஜ்­ஜியத் தலை­வ­ரான ஜனா­தி­ப­தியின் குடும்ப வாழ்க்கை சீரா­ன­தாக இருப்­பது மிகவும் முக்­கி­ய­மா­னது.

இங்கு ஜனா­தி­ப­தியின் மனைவி, அதா­வது முதற்­பெண்­மணி, தனிப்­பட்ட மனுஷி அல்ல. அவர் ஆட்சி நிர்­வாகக் கட்­ட­மைப்பின் ஓரங்கம்.  ஜனா­தி­ப­தியின் குழுவில் முதற்­பெண்­ம­ணிக்கு முக்­கி­ய­மான வகி­பாகம் உண்டு. வெள்ளை மாளி­கையில் முதற்­பெண்­ம­ணிக்கு தனி­யா­ன­தொரு அலு­வ­லகம் இருக்­கி­றது.

சம்­பி­ர­தா­ய­பூர்வ விழாக்­களில் முதற்­பெண்­மணி கட்­டா­ய­மாக பங்­கு­பற்­றியே ஆக வேண்டும். பொதுப் பணி­களில் பங்­க­ளிப்பு செய்­வது கட்­டா­ய­மா­னது.

அங்கு பராக் ஒபா­மா­விற்கு எந்­த­ளவு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டதோ, அதே­ய­ளவு முக்­கி­யத்­துவம் மிஷெல் ஒபா­மா­விற்கு இருந்­தது.

பில் கிளின்டனின் மனை­வி­யான ஹிலாரி கிளின்­டனும் அப்­ப­டித்தான். வெள்ளை மாளி­கையில் தீர்க்­க­மா­ன­தொரு சக்­தி­யாக அவர் விளங்­கினார்.

இது வேறு நாடு­களில் வித்­தி­யா­சப்­ப­டு­கி­றது. சில நாடு­களில் முதற்­பெண்­ம­ணியின் பெயர் என்ன என்று கேட்டால், எவ்­வ­ளவு மெனக்­கெட்­டாலும் நினைவில் கூட வராது. சீனப் பிர­தமர் லீ கி­யாங்கின் மனைவி யார்? ஜேர்­ம­னியின் முன்னாள் சான்ஸ்லர் ஏஞ்­சலா மேர்க்­கலின் கண­வ­ரது பெயரை அறிந்­தி­ருக்­கி­றீர்­களா?

இத்­தா­லியில் முதற்­பெண்­மணி என்ற சொற்­றொ­ட­ருக்கு சரி­யான மொழி­பெ­யர்ப்பே கிடை­யாதாம். அங்கு ஆங்­கிலப் பதம் தான் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதாம். அங்கு பிர­த­ம­ராக இருந்த சில்­வியோ பெர்­லுஸ்­கோனி ஸ்த்ரீலோ­ல­னா­கவே பார்க்­கப்­ப­டு­வது உண்டு. இவர் சம்­பந்­தப்­பட்ட ஏரா­ள­மான சர்ச்­சைகள்.

ஒரு கட்­டத்தில் பெர்­லுஸ்­கோனியை அவ­ரது மனைவி விவ­கா­ரத்து செய்தார். ஆனாலும் கூட அவ­ருக்கு எதி­ராக அர­சியல் குற்­றப்­பி­ரே­ரணை தாக்கல் செய்­யப்­ப­டவும் இல்லை. அவர் பதவி வில­கவும் இ;ல்லை.

இது இத்­தா­லியின் ஜன­நா­யக ஆட்சி நிர்­வாகக் கட்­ட­மைப்பில் அரச தலை­வர்­களின் ஒழுக்கம் பற்றி அந்­நாட்டின் சமூ­கத்­தி­லுள்ள பொதுப்­புத்தி. இந்தப் பொதுப்­புத்­தியைத் தீர்மானிப்­பதில் கலா­சார கார­ணி­களும் தாக்கம் செலுத்த முடியும்.

ஒரு சமூகம் மத விழு­மி­யங்­களை மதிப்­ப­தா­கவும், அந்த மத விழு­மியங்­களில் குடும்பம் என்ற அல­கிற்கு முக்­கி­யத்­துவம் உள்­ள­தா­கவும் வைத்து கொள்வோம். அத்­த­கைய சமூ­கத்தில் அரச தலைவர் ஒழுக்கம் மிக்­க­வ­ரா­கவும், சிறப்­பான குடும்ப உறவைக் கொண்­ட­வ­ரா­கவும் இருப்­பது அவ­சி­ய­மாகும்.

இந்தத் தகு­திகள் இல்­லாத பட்­சத்தில், இத்­த­கைய தலைவர் தாம் வகிக்கும் பத­விக்கு பொருத்­த­மற்­ற­வ­ராகக் கரு­தப்­ப­டுவார்.

இது அர­சி­யலும், மதமும் ஆட்சி நிர்­வாகக் கட்­ட­மைப்­பிலோ, கலா­சார ரீதி­யா­கவோ பின்னிப் பிணைந்த தேசங்­களில் காணக்­கூ­டிய இயல்பு.

கன­டாவைப் பொறுத்­த­வ­ரையில், மதம் உள்­ளிட்ட கார­ணி­களை விடவும் ஆட்சி நிர்­வாகத் திறன் என்­பதே ஜன­நா­ய­கத்தைத் தீர்மானிப்­ப­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

ட்ரூடோ மனை­வி­யிடம் இருந்து பிரிந்­ததைப் பற்­றியோ, பிரி­விற்­கான கார­ணங்கள் பற்­றியோ அந்­நாட்டு மக்கள் அதிக கரி­சனை காட்­டாமல் இருக்­கி­றார்கள். கன­டாவின் அர­சியல் வர­லாற்றை ஆராய்ந்தால், பத­வியில் இருக்­கையில் மனை­வியைப் பிரிந்த ஒரே ஒரு பிர­தமர் தான் இருக்­கிறார். அவர் வேறு யாரு­மல்லர். தற்­போ­தைய பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோவ்வின் தந்தை. 1977இல் மனைவியை விட்டுப் பிரிந்த பியரே எலியெட் ட்ரூடோ.

இந்தப் பிரிவுக்குப் பின்னரும் பியரே ட்ரூடோ பிரதமராக இருந்தார். இன்னொரு தடவையும் பிரதமராக தெரிவானார்.

அவர் மனைவியை விவகாரத்து செய்ததால், கனேடிய மக்கள் அவரை நிராகரிக்கவும் இல்லை. மனைவியுடன் வாழத் தெரியாத குடும்பத்தில் இருந்து வந்தார் என ஜஸ்டின் ட்ரூடோவை புறக்கணிக்கவும் இல்லை.

கனேடிய மக்களைப் பொறுத்தவரையில், மதமோ, வேறெந்த காரணங்களோ முக்கியமில்லை. ஜனநாயக ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் அவரது நோக்கமும், ஆற்றலுமே முக்கியம்.

எதற்காக ஒருவர் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு அரசியல் பதவியைப் பெற விரும்புகிறாரோ, அந்தப் பதவிக்குரிய எதிர்பார்ப்புகளை அடியொட்டிச் சென்று அவற்றை சரியாக நிறைவேற்றினால் போதும். மற்றதெல்லாம் பொருட்டல்ல என்பது கனேடிய மக்கள் கற்றுத்தரும் ஜனநாயகப் பாடம், ஜஸ்டின் ட்ரூடோவின் கதை.

சதீஷ் கிருஷ்­ண­பிள்ளை