யாழில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது ; இருவர் தப்பியோட்டம்

134 0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை  கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது , 54 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , கஞ்சாவை மீட்டுள்ளதுடன், கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிசாரிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளத்துடன், தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.