200வருடமாக நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்தவர்களை புறந்தள்ளி செயற்பட யாரையும் அனுமதிக்க முடியாது என கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(06.08.2023)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளன.
மலையக மக்களுக்கான அனைத்துவிதமான உரிமைகளையும் வலியுறுத்தி நாளை (08.08.2023) மாபெரும் பேரணி நடத்தவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 7.30மணியளவில் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இருந்து மட்டக்களப்பு நகர் வரையில் பாரிய கவனஈர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்து தரப்பினரையும் உதவுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

