இலங்கைக்கு கண் வில்லைகளை இறக்குமதி செய்ததில் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமாக, முறைகேடு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கணக்காய்வு திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு சுமார் ஒரு இலட்சம் கண் வில்லைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 10 கோடி ரூபாய் நிதி முறைக்கேடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ அண்மையில் இது தொடர்பில் வெளிப்படுத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன் பின்னர் சுகாதார அமைச்சரின் ஆலோசனைக்கமைய, சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் சமல் சஞ்சீவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பித்த முறைப்பாட்டில், குறைந்த விலையில் கண்வில்லைகளை வழங்குவதற்கான விலைமனு கோரலுக்கு பதிலாக, அதிக விலையில் வாங்குவதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் கொள்வனவு குழுவிற்கு விசேட அனுமதியொன்றை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கணக்காய்வாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

