மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 24ஆவது நாளாக…(காணொளி)

295 0

 

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 24ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

தமக்கான நியமனங்களை வழங்கக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக, 24ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகம் போராட்டம் நடாத்திவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், இன்று தாங்கள் பெற்ற பட்டச் சான்றிதழை கொடியாக கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு மாதகாலத்தினை நெருங்கும் தமது சாத்வீக போராட்டத்திற்கு இதுவரையில் சாதகமான பதில்கள் வழங்கப்படவில்லையென இதன்போது தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமது சத்தியாக்கிரக போராட்டத்திற்கு அரசியல்வாதிகளின் ஆதரவு மிகவும் குறைந்தளவிலேயே உள்ளதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் அனைத்து உரிமைகளையும் போராடியே பெறவேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை இன்றும் நிலவுவதாகத் தெரிவித்த பட்டதாரிகள், எதிர்காலத்தில் தமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் சிந்திக்கவேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே தமது கோரிக்கைகளுக்கான சரியான தீர்வினை வழங்கும் வரை போராட்டம் தொடரும் எனவும், அதற்கான அழுத்தங்களை மாகாண சபைக்கும், மத்திய அரசுக்கும் அரசியல்வாதிகள் வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.