வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக 12 அம்ச கோரிக்கையை முன் வைத்து கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

301 0

 

வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக 12 அம்ச கோரிக்கையை முன் வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு 12 அம்ச கோரிக்கையை அடங்கிய மகஜரை கையளிக்கும் முகமாக வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் இவ்வார்ப்பாட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது.

நிலைமாறும் நீதிப்பொறிமுறையின் குறைபாடுகள், கலந்தாலோசனை செயலணியும் தேசிய கலந்தாலோசனையும், காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகமும், வலிந்து காணமல் ஆக்கப்பட்டமை சார்ந்த அரசின் நிலைப்பாடும், பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் கைதிகள், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளும் பாலியல் குற்றங்களும், மாகாண சபைகளின் அதிகாரத்தை குறைக்கும் அபிவிருத்தி சட்ட மூலம், வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம் முழுமையாக நடைபெறாமை மற்றும் இராணுவத்தின் நிலைகொள்ளல், இராணுவ மயமாதல், நீதிப் பொறிமுறையில் பாரபட்சம், மனித உரிமைப் பாதுகாவலர்கள் அச்சுறுத்தப்படல் போன்ற 12 அம்ச கோரிக்கை அடங்கிய மகஜரை கையளிப்பதற்காக ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் கையளிப்பதற்கான ஒழுங்கை அரசு வழி செய்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தினர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர்.