சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

244 0

இலங்கையில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பில், சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி, இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்மொன்று மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு கிழக்கு ஓருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி, இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி டிப்போச் சந்திக்கு அருகில் ஒன்று கூடிய பொதுமக்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் சொல், பயங்கரவாதச் தடைச் சட்டத்தை உடனே நீக்கு, இலங்கையில் நிலைமாறு கால நீதிக்கான அமைச்சு ஒன்றை உருவாக்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், சுலேகங்களையும் ஏந்தியிருந்தனர்.

தொடர்ந்து கிளிநொச்சி 155ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள ஜ.நா அலுவலகத்திற்குச் சென்ற மக்கள், அங்கு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.