யாழ்ப்பாணத்தில் பேரணி (காணொளி)

288 0

நல்லிணக்கம் எற்பட வேண்டுமாயின் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிப்பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்;;டது.

நாட்டில் நிலையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் சட்டத்திற்கும், மனித உரிமைக்குமான ஐக்கிய நிறுவனத்தினால் குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகிய மக்கள் பேரணி யாழ்ப்பாண ஐக்கிய நாடுகள் பணியகத்தில் தமது கோரிக்கைகளை வலியுறுத்திய மகஜர் கையளிப்புடன் நிறைவு பெற்றது.

பேரணியில் இராணுவ மயமாதல் நீக்கப்பட வேண்டும், படையினர் வசமுள்ள பொது மக்களின் கணிகள் மீண்டும் பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்த பதாதைகளைத் தாங்கியவாறு மக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

குறித்த மகஜர் வடக்கு, கிழக்கின் ஏனைய எட்டு மாவட்டங்களிலுமுள்ள ஐக்கிய நர்டுகள் பணியகத்தில் கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரணியில் காணமல் போனவர்களின் உறவினர்கள், காணி கையளிக்கப்படாத மக்கள், மற்றும் அரசியில் கைதிகளின் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.