இலங்கை வர்த்தகர்களுக்குக் கொலைமிரட்டல் விடுத்து கப்பம் பெறும் இருவர்

163 0
இலங்கை  வர்த்தகர்களுக்குக்  கொலைமிரட்டல் விடுத்து  அவர்களிடமிருந்து  கப்பம் பெறும் வலையமைப்பை இயக்கிய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, மேலும் இரு குற்றவாளிகள் வலையமைப்பு  மீண்டும் செயற்படுவதாக  பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இலங்கை வர்த்தகர்களுக்கு  கொலை மிரட்டல் விடுத்து கோடிக்கணக்கில்  கப்பம் கோரும்  துபாயில் பதுங்கியிருக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த இரு குற்றவாளிகளில் ஒருவர் மேல் மாகாணத்தில் வசிக்கும் வர்த்தகர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து கையாட்களை வைத்து கப்பம் கேட்பதாகவும் மற்றைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி தென் மாகாணத்தை மையமாக கொண்டு கப்பம்  மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும்  புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழுள்ள கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினரும்  இவர்கள் இருவர்  தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.