வயலில் வேலை செய்த பெண்ணைத் தாக்கிக் கொன்ற காட்டு யானை

133 0
வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்ணொருவரை காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தல, கொங்கெட்டிய பகுதியில் வயல் ஒன்றில் வயலில் வேலை செய்த  63 வயதுடைய பெண்ணே இவ்வாறு காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

யானை வருவதாக ஊர்மக்கள் கூச்சலிட்ட போதும் உயிரிழந்த பெண்ணுக்கு செவிப்புலனற்ற குறைபாடு இருந்த காரணத்தால் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில்  இருந்து தெரியவதுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.