‘மலையகம் 200’ எழுச்சி நடைபவனி மதவாச்சியை அடைந்தது!

156 0
மலையக மக்களின் பங்குபற்றலில் இன்று (04) காலை வவுனியா, செட்டிக்குளத்தில் ஆரம்பமான நடைபவனிப் பேரணிகள் பிற்பகல் வேளையில் மதவாச்சியை சென்றடைந்தன.

இதில் பல்வேறு நிறுவனங்களை சார்ந்தவர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பகுதிகளில் இருந்து திரண்டு வந்த மக்களின் பேரணிகளும் ‘மலையகம் 200’ பேரணியோடு இணைந்து பயணித்துள்ளன.

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நடைபவனி கடந்த ஜூலை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலைமன்னாரில் கலை நிகழ்வுகளோடு ஆரம்பமாகி, 29ஆம் திகதி சனிக்கிழமை தலைமன்னார் புனித லோரன்ஸ் தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி இன்று 8ஆம் நாளாக தொடர்ந்து வருகிறது.

இப்பயணத்தின் 16வது நாளான எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதி மலையக எழுச்சிப் பேரணி மாத்தளையை சென்றடைவதோடு ‘மலையகம் 200’ நடைபயண நிகழ்வுகள் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.