கடற்தொழில் பிரச்சினையில் வன்முறைகளுக்கு இடமளிக்க கூடாது-இரா சம்பந்தன்

252 0
கடற்தொழிலாளர்களின் பிரச்சினையை அவர்களிடமே விடும் பட்சத்தில் அதற்கான தீர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் தி ஹிந்து பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடற்தொழில் பிரச்சினையில் வன்முறைகளுக்கு இடமளிக்க கூடாது.
முக்கியமாக இந்தியா இழுவைப் படகுகளை கைவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே இலங்கையில் இழுவைப் படகுகளை தடுக்கும் சட்டமூலம் எம்.ஏ.சுமந்திரனால் கொண்டுவரப்பட்டு, இந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் தனிப்பட்ட விஜயமாக இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.