ஹம்பாந்தோட்டை பேரகம மஹஆர பிரதேசத்தில் நேற்று இரவு நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 7.20 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
திடீரென பாரிய சத்தத்துடன் நிலம் குலுங்கியதாகவும், வீடுகளின் தரையில் பதிக்கப்பட்டு இருந்த டைல்ஸ்கள் உடைந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறுகிய நேரத்துக்கு இந்த சத்தம் காணப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் வினவிய போது, அவ்வாறான நிலநடுக்கம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என மத்திய நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

