ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இலங்கைப் பெண் செய்த காரியம்

209 0
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில்தமது 2 மாதக் குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கைப் பெண் ஒருவர் 3 வருடகால சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
அங்கு பணிப் பெண்ணாக செயற்பட்டு வந்த குறித்தப் பெண், தொழில்தருணரின் வீட்டில் இருந்து தப்பிச் சென்றதுடன், சில காலங்களின் பின்னர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
அவர் தமது குழந்தையை விற்பனை செய்ய முயற்சிப்பதை அறிந்த காவற்துறையினர், குழந்தை விற்பனை முகவர் ஊடாக அவரை தொடர்பு கொண்டு, குழந்தையை வாங்குவதைப் போன்று நடித்து அவரை கைது செய்துள்ளனர்.
குழந்தையை அவர் 10 ஆயிரம் திர்ஹம்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் தாம் தமது குழந்தையை விற்பனை செய்யவில்லை என்றும், மாறாக தம்மால் வளர்க்க முடியாத குழந்தையை தத்துக் கொடுக்கவே முயற்சித்ததாகவும் குறித்த இலங்கைப் பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 29ம் திகதி இடம்பெறவுள்ளது.