இந்தோனேஷியாவில் கொலை செய்யப்பட்ட கோடீஸ்வரரின் சடலம் 8 மாதங்களின் பின் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது!

183 0

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகரான ஓனேஷ் சுபசிங்கவின் சடலம்  படுகொலை செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னர்  செவ்வாய்க்கிழமை (1) இரவு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை இன்று (03)  இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரின் சகோதரியான  அனோஷி சுபசிங்க இந்தக் கொலை தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.