தாதியராக அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு – சுகாதார அமைச்சர்

74 0
விஞ்ஞான பாடம் மாத்திரமன்றி அனைத்து பாடங்களையும் கற்ற மாணவர்களுக்கும் தாதியர் பணியில் நுழைவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அத்துடன் நியாயமான மற்றும் திறந்த சந்தைக்கு இடமளிக்கும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டம் நீக்கப்படும் எனவும் இலங்கை மருத்துவ சபை சட்டமும் முற்றாக இல்லாதொழிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, போதைப்பொருள் பரிசோதனைக்கான அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தை அமைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவையும் வழிகாட்டலையும் எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.