அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி சங்கம்

60 0

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத இடங்களில் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கவுள்ளதாக ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (31.07.2023)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் செயலாளர் தம்மிக்முணசிங்க,கிழக்கு மாகாண இணைப்பாளர் லோகதராஜா திவாகரன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்தாவது,

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் எமது சங்கத்தின் சார்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சந்தித்து அவர்களிடம் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தோம்.

சில பிரதேச செயலகங்களுக்கு சென்று அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை இனம் கண்டு கொண்டோம் அந்த வகையில் எதிர்வரும் மாதம் ஒன்பதாம் திகதி பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம் பெற உள்ள பேச்சு வார்த்தையில் நமது அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் சார்பாக நாங்கள் கலந்து கொள்ள இருக்கின்றோம்.

அங்கு கலந்து கொள்ளும் போது எமது மாவட்டத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணும் முகமாகவே நாங்கள் இன்று அவர்களை சந்தித்து சில கலந்துரையாடல்களை செய்ததோம்.

அந்த வகையில் நாங்கள் சில கோரிக்கைகளை முன் வைக்க இருக்கின்றோம். அதாவது அதிகரித்த வாழ்க்கைச் செலவு அந்த வகையில் அனைத்து உத்தியோகஸ்தர்களுக்கும் 20,000 வாழ்க்கைச் செலவுக்கான கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும்.

ஆN5 இலிருந்து ஆN7 சம்பள அடைவு மட்டத்தை அதிகரிக்க வேண்டும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான ஒரு கடமை பட்டியலை உருவாக்க வேண்டும்.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு செவ்வாய் போன்றவை உருவாக்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அதே போன்று இடம் மாற்றங்களை மேற்கொள்ளும்போது சரியான ஒரு பொறிமுறையை கையாண்டு எந்த உத்தியோர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இடம் மாற்றத்தை வழங்குவதற்கான வழிமுறையை உண்டாக்க வேண்டும்.ஓய்வூதியம் மற்றும் இதர சேவைகளுக்கு உத்தியோகத்தர்களுக்கான நலன்கள் பாதிக்கப்படாமல் அவர்களுக்கு உரிய சேவைகள் கிடைக்கப் பெற வேண்டும். போன்ற கோரிக்கைகளை ஒன்பதாம் திகதி இடம்பெறும் கலந்துரையாடலில் முன்வைக்க இருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் மாகாண சபை ஊடாக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான ஒரு கடமைப்பட்டியல் இன்மையினால் பல அசோகரிகளை எதிர் நோக்குவதாக அவர்கள் நம்மிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அவர்களுக்குமான முறையான கடமை பட்டியல் ஒன்றை வகுக்கப் பட வேண்டும் என எமது அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் வலியுறுத்த உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் அதிலும் குறிப்பாக வெளிக்களத்தில் கடமைக்கு செல்லும் உத்தியோதர்கள் அவர்கள் பொருளாதார ரீதியாகவும் அதேபோன்று அவர்களுக்கான வாகன செலவினங்கள் உயர்த்தும் அதே போன்று அவர்களுக்கான கொடுப்பனவுகள் முறையாக கிடைக்கப் பெறவில்லை என்கின்ற மனக்கசப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

எதிர்வரும் காலங்களில் நமக்கான கோரிக்கைகள் நியாயமான முறையில் தீர்க்கப்படாத இடத்தில் எமது மாவட்டம் சார்ந்தும் அதை போன்று எந்தெந்த மாவட்டங்களில் அந்த அபிவிருத்தி உத்தியோதர்களுக்கான முறையான பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லையோ அங்கு விழிப்புணர்வுக்கான சில போராட்டங்களை மேற்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.