அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா இலங்கைக்காக முன்வந்திருக்கிறது

119 0

இலங்கைக்கு உதவிகள தேவைப்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா இலங்கைக்காக முன்வந்திருக்கிறது.

அதேபோன்று சீனா, இலங்கைக்கிடையிலான நட்புறவு நீண்டகால உறவு என்பது உயர் நீதிமன்ற கட்டத்தொகுதியின் மறுசீரமைப்பின் மூலம் மேலும் உறுதிப்படுத்துகிறது என இலங்கைக்கான சீன தூதுவர்  சீ வென்ஹொன்ங் தெரிவித்தார்.

 

சீன அரசாங்கத்தின் 240 மில்லியன் யுவான் நன்கொடையின் கீழ் புதுக்கடை உயர் நீதிமன்ற கட்டடத்தொகுதியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு நீதி அமைச்சர் தலைமையில் இ்டம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

1988இல் சீன அரசாங்கத்தின் நன்கொடையாக நிர்மாணித்து திறந்துவைக்கப்பட்ட உயர்நீதிமன்ற கட்டத்தொகுதி இரண்டு தடவைகள் மறுசீரமபைப்பு செய்திருக்கிறது.

30 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சீனா மற்றும் இலங்கை அரசாங் உயர் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு புதிய வாழ்வொன்றை வழங்குவதற்கு இணைந்திருக்கிறோம்.

மேலும் உயர் நீதிமன்ற கட்டட தொகுதியின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் அதன் ஆரம்ப வடிவமைப்புக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இறுதியில் மேன்முறையீட்டு நிதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு தங்களின் கடமைகளின் போது புதிய சூழலை அனுபவிக்க முடியுமாகும்.

அத்துடன் உயர்நீதிமன்ற கட்டடத்தொகுதி சீனா மற்றும் இலங்கைக்கிடையில்  நீண்டகால பங்குடமை மற்றும் இரண்டு நாடுகளுக்கிடையிலான நட்புறவை பலப்படுத்திக்கொள்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பல பரம்பரையினரின் முயற்சிக்கு சாட்சியாக இருக்கிறது.

அதேபோன்று இலங்கைக்கு உதவிகள தேவைப்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா இலங்கைக்காக முன்வந்திருக்கிறது.

அதன் பிரகாரம் தற்போது உயர் நீதிமன்ற கட்டடத்தாெகுதியை அழகாகவும் பலம்மிக்கதாகவும் மறுசீரமைத்து வழங்க நடவடிக்கை எடுப்போம். இலங்கையுடனான சீனாவின் நற்புறவை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.