திருகோணமலை-தென்னமர வாடி விவசாய காணிகளைப் பௌத்த மத குருவிடம் இருந்து மீட்டுத்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காணிகள் தொடர்பில் மக்கள் கூறியுள்ளதாவது, வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இடமே தென்னமர மரவாடி கிராமமாகும்.
இந்தக் கிராமத்தில் 92 குடும்பங்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். தற்போது புல்மோட்டை அரிசி க்ஷமலை விகாரையின் பௌத்த மதகுரு தமது காணிகளை ஆக்கிரமித்து வருகிறார்.
இதனால் 45 வருட காலமாக தமது கிராமத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையில், காணிகளுக்குள் காணப்படுகின்ற பற்றைகளை அகற்ற முடியாத நிலையில் காணப்படுகின்து. இவ்வாறான அடாவடித்தனத்தினால் குறித்த கிராமத்துக்கு மக்கள் வருகை தருவதில்லை.
மேலும், தமக்குச் சொந்தமான காணிகளை புல்மோட்டை- அரிசி மலை பௌத்தப்பிக்கு துப்புரவு செய்து வருவதாகவும் பாரிய மரங்களை வெட்டி காணிகளை பூஜா பூமி என்று கூறி ஆக்கிரமித்து வருகிறார் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக் காலத்தில் இருக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தோம் தற்போது நாங்கள் கவலையுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில், கிராமத்தை விட்டுச் செல்ல வேண்டிய மனநிலை ஏற்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு நபர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் சமயத்தை வழிபடும் வகையில் புத்தர் சிலையொன்றை வைத்து தமது சமய வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வாறான செயற்பாடுகளை அரச அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாட்டின் ஜனாதிபதி மற்றும் திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் கூறிய கவனம் எடுத்து மக்களுடைய காணிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தென்னமர வாடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

