அனைவரும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

264 0

உணவு உள்ளிட்ட நுகர்வோர் பண்டங்களை விநியோகிக்கும் அனைவரும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.

சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட ஏனைய நுகர்வு பண்டங்களின் தரம் நாட்டு அபிவிருத்தியில் முக்கிய அளவுகோலாக இருக்கின்றது.

கொழும்பு தொடக்கம் நாடு முழுவதுமுள்ள உணவக சமையலறைகளில் தரம் மற்றும் தூய்மையை காண முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நவீன தொழிநுட்பத்தின் ஊடாக நுகர்வோர் பெறும் பல்வேறு சேவைகளை மேலும் நம்பிக்கைமிக்க, பாதுகாப்பானதாக மாற்றுவது தமது இலக்காகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.