கண்டி பாடசாலை ஒன்றில் மாணவியைச் சேர்ப்பதாக கூறி 3 இலட்சம் ரூபாவை மோசடி செய்தவர் கைது!

223 0

கண்டி நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவியை ஒருவரை சேர்ப்பதாக  கூறி மூன்று இலட்சம் ரூபாவை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில்  ஒருவரை பொலிஸார் இன்று புதன்கிழமை (26) கைது செய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உ ட்பட்ட  குளகம்மன பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரிடம், குறித்த சந்தேக நபர் மூன்று இலட்சம் ரூபாவைப் பெற்றுள்ளார்.

இவ்வாறு பெறப்பட்ட  பணம்  மோசடி செய்யப்பட்டமை தொடர்பில்  கடந்த பெப்ரவரி மாதம் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு  செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில்  பொலிஸாரின் விசாரணைகள் பின்  மெனிக்கின்ன பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.