படுகொலை செய்யப்பட்ட வாசனா குமாரியின் தங்க நகை அடகுக் கடையில் ?

155 0
அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட வாசனா குமாரியின் கழுத்திலிருந்த தங்க நகையை கைதான சந்தேக நபர் ஹொரனை பிரதேசத்திலுள்ள அடகுக்  கடை ஒன்றில்  அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சந்தேக நபரின் தேசிய அடையாள அட்டையின் தொழில்நுட்பத்தின் ஊடாக பொலிஸார் இதனை கண்டுபிடித்துள்ளனர் .

மேலும்  சந்தேக நபர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதனால் இது தொடர்பிலான உண்மைத் தன்மையை உறுதியாக கூற முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

இதேவேளை, சந்தேக நபரை ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் அண்மையில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரிந்ததே.