டொனால்ட் ட்ரம்பின் 2005ம் ஆண்டுக்கான வரி செலுத்தல் பட்டியல் வெளியானது

209 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 2005ம் ஆண்டுக்கான வரி செலுத்தல் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதன்படி 150 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வருமானத்துக்காக அவர் 38 மில்லியன் டொலர்களை வரியாக செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 580 கோடி ரூபா இலங்கை பெறுமதியாகும்.

ட்ரம்ப் தமது வருமான வரி பட்டியலை வெளியிட தேர்தல் காலத்தில் மறுப்பு தெரிவித்துவந்தார்.

இந்த நிலையில், தற்போது அதனை அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெள்ளை மாளிகை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் சட்டவிரோதமானது என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.