கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவாக தலைநகர் பேர்லினில் “கறுப்பு வானம்” கூட்டு வாசிப்பு

209 0

“1983ல் கொழும்பு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் காற்றை நினைவில் வைத்திருக்கிறேன். முழு வானமும் இருளாலும் நெருப்பாலும் நிறைந்திருந்தது.”

“கறுப்பு வானம்” , சௌமியா, அனுயா மற்றும் சிந்துயன் ஆகியோரின் கூட்டு வாசிப்பு. ஜூலை 1983 இல் ஒரு வாரகால சிறிலங்கா அரச படுகொலையில் தப்பிப்பிழைத்த தமிழர்களின் 32 சாட்சியங்கள், இதில் 5000 தமிழ் பொதுமக்கள் வரை சிங்கள மக்களாலும் , ராணுவத்தாலும் , காவல்துறையாலும் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த குறிப்பிட்ட இனப்படுகொலைக்குப் பின் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் புலம்பெயர ஆரம்பித்தனர்.

இப் படுகொலை நமது வரலாற்றையும் எதிர்காலத்தையும் மற்றும் குடும்பம், மக்கள் மற்றும் ஒரு தேசம் போன்ற வாழ்க்கையின் போக்கை மாற்றியது குறிப்பிடதக்கது.

பல ஈழத் தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் நகரமான பேர்லினில், நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இவ் இனப்படுகொலையை நினைவுகூர, எதிர்க்க, கண்ணில் காண மண்டபம் நிறைந்த பல்லின மக்கள் ஒன்றுகூடியது குறிப்பிடத்தக்கது .