உடப்பு காளி கோவிலில் தங்க நகைகள், பணம் திருட்டு : பிரதான சந்தேக நபர் கைது!

124 0
உடப்பு காளி கோவிலில் தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் பிரதான சந்தேக நபர் ஒருவரை உடப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முந்தல் – கருங்காலிச்சோலையைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுக்கு அதிக அடிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 14 நாட்களுக்கு முன்னர் உடப்பு காளி கோவிலுக்குள் நுழைந்த சந்தேக நபர், காளியம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த   தங்க நகைகளையும் அங்கிருந்த சுமார் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றிருந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.