இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் மேம்பாட்டுக்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய விஜயம் வெற்றிகரமாக அமைந்தது எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்தியா விஜயத்தை முடித்து நாடு திரும்பிய அமைச்சர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 26ஆம் திகதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

