மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் : விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஆசிரியருக்கு பிணை

193 0

தனியார் வகுப்புக்களில் கலந்துகொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியருக்கு களுத்துறை பிராதான நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (21)  பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

களுத்துறையைச் சேர்ந்த 30 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் தனியார் வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு 2  மாதங்களும் 10 நாட்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், களுத்துறை பிரதான நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் அவரை 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பிலான  வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 22 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.