இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 24வது தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது.
இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை கொழும்பு உள்ளிட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் 77 மத்திய நிலையங்களில் இந்தத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
தேர்தலின் தெரிவத்தாட்சி அதிகாரியாக ஜனாதிபதி சட்டத்தரணி பிரதி மன்றாடியார் நாயகம் சுகத கம்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெறும் தேர்தல் நடவடிக்கைகள் அவரால் கண்காணிக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஏனைய பிரதேசங்களில் இடம்பெறும் தேர்தல்கள் கண்காணிப்பு பணிகளில் குறித்த மாவட்ட நீதிமன்றங்களின் நீதவான்கள் மற்றும் மேலதிக நீதவான்கள் அல்லது நீதவான் ஆகியோர் செயற்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது