இராணுவத்துக்கு சார்பாக மனித உரிமைகள் அமர்வில் அறிக்கை

338 0

இலங்கை பாதுகாப்பு படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்ற அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

குறித்த அறிக்கை சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவால் 200 பக்கங்களைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கையில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், எதிர்வரும் 17ம் திகதி ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்த விடயங்களை முன்வைக்கும் நடவடிக்கை நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.