யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி காயப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் இன்று பெற்றுள்ளது.
திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அழகுக் கலை நிலையம் நடத்தும் 40 வயதுடைய செந்தூரன்
ஜெயவதனி என்பவரே கத்தியால் குத்தப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் ஆடியபாதம் வீதியில் ஜெயவதனி நடத்தும் அழகுகலை நிலையத்திலேயே கத்தியால் கழுத்தில் குத்தி காயப்படுத்தப்பட்டுள்ளார்.
கத்தியால் குத்தியவர் இவரது கணவராகிய செந்தூரன் என அடையாளப்படுத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

